கிசான் திட்ட முறைகேடு: 10 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கம்| Dinamalar

தமிழ்நாடு

கிசான் திட்ட முறைகேடு: 10 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கம்

Added : செப் 13, 2020
Share
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்ட முறைகேடு காரணமாக, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அல்லாதோர் 10 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் டுள்ளன.விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி, புதிதாக சேர்க்கப்பட்ட 70 ஆயிரம் பேரில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அல்லாதோர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்ட முறைகேடு காரணமாக, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அல்லாதோர் 10 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி, புதிதாக சேர்க்கப்பட்ட 70 ஆயிரம் பேரில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அல்லாதோர் 42 ஆயிரம் பேர் உள்ளனர். இது தவிர, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் என மொத்தம் 52 ஆயிரம் பேர், போலியாக சேர்க்கப்பட்டு பயனடைந்தது தெரிய வந்துள்ளது.இவர்களில், தற்போது வரை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அல்லாதோர் 19 ஆயிரம் பேர் வங்கி கணக்கில், இருந்து 7.60 கோடி ரூபாய் வரை திரும்ப பெறப்பட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடலுார், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அல்லாத 10 ஆயிரம் பேருக்கு, விழுப்புரம் மாவட்ட வங்கிகளில் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால், 10 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பெற்ற 4 கோடி ரூபாயை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X