தமிழ்நாடு

கிசான் திட்ட முறைகேடு : வேளாண் அதிகாரி திடீர் இடமாற்றம்

Added : செப் 13, 2020
Share
Advertisement
விழுப்புரம் : பி.எம்., கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம் மாவட்ட வேளாண் அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் உட்பட 13 மாவட்டங்களில் பிரதமர் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் உதவி தொகையை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.இதில், விழுப்புரம்



விழுப்புரம் : பி.எம்., கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம் மாவட்ட வேளாண் அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் உட்பட 13 மாவட்டங்களில் பிரதமர் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் உதவி தொகையை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.இதில், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலி பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களின் வங்கிக் கணக்கில், இருந்து பணத்தை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.அதோடு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் வேளாண் துணை இயக்குனராக (மத்திய அரசு திட்டம் மற்றும் மாநில திட்டம்) பணியாற்றி வந்த, கென்னடி ஜெபக்குமார், நாமக்கல் மாவட்ட வேளாண் துணை இயக்குனராக (உழவர் பயிற்சி நிலையம்) நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவர், கடந்த 6 மாதங்களாக விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராகவும் பொறுப்பு வகித்து வந்த நிலையில், பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளது வேளாண் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X