பொது செய்தி

தமிழ்நாடு

தனித்தேர்வர்களுக்கு 'கொரோனா' பரிசோதனை

Added : செப் 13, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி சி.இ.ஓ., கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 துணைத்தேர்வு மற்றும் தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பிற்கான தேர்வுகள் வரும், 21ல் துவங்குகிறது. இத்தேர்வுகளை எழுத உள்ள மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள், சொல்வதை எழுதுபவர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் ஆகியோர், தேர்வு மையத்துக்கு வருவதற்கு முன்பே, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேர்வு எழுத வரும்போது, தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான டாக்டர் சான்றிதழை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். மேலும், கொரோனா பரிசோதனை செய்வதில் யாருக்கும் சிரமம் இருந்தால், தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகத்தை, 63824 20377, 73737 73108 எண்ணில் வரும், 15க்குள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X