பொது செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகையை உயர்த்த மா.திறனாளிகள் கோரிக்கை

Added : செப் 13, 2020
Share
Advertisement

தர்மபுரி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. தர்மபுரி செங்கொடிபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கரூரான் தலைமை வகித்தார். தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சமூக நலத்துறை அரசானை எண், 4ன் படி ஊனம் மற்றும் ஆண்டு வருமானம், மூன்று லட்சத்துக்கு கீழுள்ள ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். 75 சதவீதம் கண் பார், செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறானளிகளுக்கான உதவித்தொகையை, 3,000ம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 16 காலை, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, மாநில துணைத்தலைவர் சரவணன் உட்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X