பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10 கோடியில் சாலைப்பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அருகே வத்தல்மலையில், 13 கி.மீ., தூரத்துக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப்பணியை, அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட கொட்லாங்காட்டில் இருந்து, வத்தல்மலை பெரியூர் வரை, 10 கோடியே, 23 லட்சம் மதிப்பில், 13 கி.மீ., தூரத்துக்கு புதிய சாலை அமைக்கும் பணியை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பின்னர், வத்தல்மலையில் நடந்த விழாவில், 85 பயனாளிகளுக்கு, 20 லட்சத்து, 83 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் (பாப்பிரெட்டிபட்டி) கோவிந்தசாமி, (அரூர்) சம்பத்குமார், ஆர்.டி.ஓ. (பொ) தணிகாசலம், தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X