பொது செய்தி

தமிழ்நாடு

சிறு வியாபாரிகளுக்கு கொரோனா நிதியுதவி

Added : செப் 13, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி நகரத்தில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய தெருக்களில், 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பெண்கள் பழக்கூடை வைத்து சிறு வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறிப்பாக, பழக்கூடை சிறு வியாபார பெண்கள் வருவாயின்றி தவித்து வந்தனர். இவர்களுக்கு உதவும் வகையில், தர்மபுரி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தலைவர் ஜெயா, செயலாளர் கிரைஸாமேரி ஆகியோர் தலைமையில், கொரோனா நிதி நிவாரணமாக, 3,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு கூடை வியாபார பெண்களுக்கு, தொடர்ந்து நிவாரணம் வங்கப்படும் என, அவர்கள் தெரிவித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பூபதி, நிர்வாகிகள் சுசிலா, ரங்கநாயகி, நிர்மலாராணி, தமிழ்மணி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X