பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று அதிகரிப்பால் கிருமி நாசினி தெளிப்பு தீவிரம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில், கிருமி நாசினி தெளிப்பு பணிகளில், நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தர்மபுரியில், கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால், தர்மபுரி நகராட்சி பொதுமக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, தர்மபுரி நகராட்சி சார்பில், மதிகோண்பாளையம், பழைய புரோக்கர் ஆபீஸ், கோட்டை மற்றும் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடந்தது.

* தர்மபுரி மாவட்டம், மோப்பிரிப்பட்டி பஞ்.,ல், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடக்கிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு, அரூர் நிலையத்தில் இருந்து வந்த, தீயணைப்பு வாகனம் மூலம், நேதாஜி நகர், மொரப்பூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X