பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை துவக்கம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை (14) நடக்கிறது என, முதல்வர் (பொ) பாக்கியமணி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், 2020-21ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கல்லூரியில் சேர ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து, இடம் கிடைக்காத மாணவர்கள் வரும், 14ல் (நாளை) நடக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நேரில் பங்கேற்று சேர்க்கை பெறலாம். மாணவ, மாணவியர் பிளஸ் 2 கல்விச்சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, உரிய கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X