சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி மாயம்: பேக்கரி மாஸ்டர் மீது புகார்

Added : செப் 13, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி அருகே, வீட்டிலிருந்து சென்ற மாணவி மாயமானது தொடர்பாக, பேக்கரி கடை மாஸ்டர் மீது புகார் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்; கடந்த, 10 இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, அக்கம் பக்கத்தில் விசாரித்து

கிருஷ்ணகிரி: நாகரசம்பட்டி அருகே, வீட்டிலிருந்து சென்ற மாணவி மாயமானது தொடர்பாக, பேக்கரி கடை மாஸ்டர் மீது புகார் செய்யப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்; கடந்த, 10 இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்தார். ஆனால், மாணவி குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், நேற்று முன்தினம் மாலை நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், வேலம்பட்டியில் உள்ள பேக்கரியில் மாஸ்டராக பணியாற்றும், திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டையை சேர்ந்த சிரிப்பழகன், 23, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவி மற்றும் சிரிப்பழகனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X