பொது செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணையாற்றில் மலைபோல் குவிந்த ரசாயன நுரையால் துர்நாற்றம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், நேற்று வெளியேற்றப்பட்ட நீரில், மலை போல் ரசாயன நுரை தேங்கி துர்நாற்றம் வீசியது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியில், இம்மாத துவக்கத்தில் இருந்தே, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகப்பட்சமாக வினாடிக்கு, 960 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், வரத்தான, 960 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் ரசாயன நுரை தேங்கியது. நேற்றும் அணைக்கு, 960 கன அடி நீர்வரத்து இருந்தது. அதனால், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து, 960 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த, நீரில் அதிகளவு ரசாயனம் கலந்திருந்திருந்ததால், நேற்று திறக்கப்பட்ட நீரில், கூடுதலாக ரசாயன நுரை ஏற்பட்டு, அணை மதகிற்கு எதிரே, தென்பெண்ணை ஆற்றில், மலைபோல் ரசாயன நுரை தேங்கி துர்நாற்றம் வீசியது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு, நீர் இருப்பு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X