பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் சேர்க்கை; விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு அரசு கல்லூரியில், காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என, முதல்வர் செண்பகலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கலை, அறிவியல் என, 19 வகையான பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில், 2020 - 21 ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை நடந்தது. அதில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15ல்) ஆகிய நாட்கள் நேரடி விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இக்கல்லூரியில் நேரடியாக வழங்கி, பெறப்படும் விண்ணப்பங்கள் இன வாரியாக உள்ள, காலி இடங்கள், மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரித்து, அதன்படி சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X