பொது செய்தி

தமிழ்நாடு

பால் பாக்கியை ஆவின் நிறுவனம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: ஆவின் நிறுவனத்தில் உள்ள, பால் பாக்கி பணத்தை உடனே வழங்க வேண்டும் என, தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் பால் வழங்குவதாக அறிவித்தார். அவர் இறந்த நிலையில், அந்த அறிவிப்பு அப்படியே உள்ளது. தற்போதைய முதல்வர், இந்த கோரிக்கையை நடைமுறைபடுத்துவார் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு, 10 வாரம் வரை பணம் நிலுவையில் உள்ளது. பால் பாக்கி நிலுவைக்கு காரணம், தர்மபுரி ஆவின், மூன்று கோடி ரூபாய் பால் பிராசஸிங் சார்ஜ் வழங்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே அரசு, 15 கோடி ரூபாயை உடனடியாக கிருஷ்ணகிரி ஆவினுக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் பணம் கேட்டு, பால் உற்பத்தியாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X