பொது செய்தி

தமிழ்நாடு

கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: வீரமணி

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: ''கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் வீரமணி கூறினார்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும், அனைத்து அரசு துறை அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தை பற்றி, பொதுமக்கள் அறிந்து கொள்ள, மாவட்ட வலைதளத்தை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி நேற்று தொடங்கி வைத்தார். இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டார். பின்னர், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில், புதிய தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் அமைப்பது குறித்து, இந்தியா- ஜப்பான் தொழிற் கூட்டமைப்பின் சார்பில், ஆய்வுக்கூட்டம், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பின்னர், அமைச்சர் வீரமணி, நிருபர்களிடம் கூறுகையில், ''பிரதமரின், கிசான் திட்டத்தில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சிவன் அருள், இந்தியா- ஜப்பான் தொழிற் கூட்டமைப்பை சேர்ந்த ஹியாரோங்சிதா, ஜோசப் சுகுமார், மொஹமத் ஆசிப், கரன் பரூதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X