சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழுக்குப்பாறையில் ஏறி தவறி விழுந்த மாணவர் சாவு

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில், வழுக்குப்பாறை மேல் ஏறிய கல்லூரி மாணவர், தவறி விழுந்து பலியானார்.


திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்தவர், முகிலன், 21. இவர், வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில், பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது, திருப்பத்தூர் அருகே, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், முகிலனும், அவரது நண்பர்கள், 10 பேரும் பைக்கில், நேற்று முன்தினம் மாலை ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அப்போது, நீர்வீழ்ச்சி அருகே உள்ள வழுக்குப்பாறையில் முகிலன் ஏறியபோது, கால் தவறி நீர்வீழ்ச்சியில், 70 அடி பள்ளத்தில் விழுந்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் ? தெரிவித்தனர். குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், வழுக்குப்பாறை மேல் ஏறி, தவறி விழுந்ததில், 50 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, வழுக்கு பாறையில் ஏற அரசு தடை விதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X