சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி 15 பசு மாடுகள் பலி

Added : செப் 13, 2020
Share
Advertisement

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே, ரயில் மோதி, 15 பசு மாடுகள் பலியாகின. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் - சித்தேரி ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையே, நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு தண்டவாளத்தின் அருகே, பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற, ஐந்து பசு மாடுகள் மீது, அந்த வழியாக சென்ற ரயில்கள் மோதியதில் பலியாகின. இதேபோல், நேற்று காலை 8:00 முதல், 11:00 வரை, தண்டவாளத்தை கடக்க முயன்ற, 10 பசு மாடுகள் ரயில் மோதி பலியாகின. இது குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் கூறியதாவது: தண்டவாளத்தின் அருகே, மேய்ச்சலுக்கு கால்நடைகளை விட வேண்டாம் என, அப்பகுதியில் பலமுறை தெரிவிக்கப்பட்டது. ஆனால், மக்கள் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதனால், ரயில் மோதி ஆடு, மாடுகள் பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. ரயில் மோதி இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு கிடைக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X