சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கியவருக்கு காப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

வந்தவாசி: வந்தவாசி அருகே, விலங்குளை வேட்டையாட, வீட்டில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் தன்ராயன், 47; செய்யாறிலுள்ள இவரது தந்தை முருகேசன், 72, போலீசாரிடம் அனுமதி பெற்று, நாட்டு துப்பாக்கி வைத்துள்ளார். அதை, தந்தைக்கு தெரியாமல், தன்ராயன் எடுத்து வந்து, இந்திரா நகரில் உள்ள, தன் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். அவர் தினமும் இரவில், வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு வனப்பகுதியில், முயல், காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக, வந்தவாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், நேற்று தன்ராயன் வீட்டில் திடீர் சோதனை செய்து, அவர் மறைத்து வைத்திருந்த, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X