பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் பாலம் கட்டினால் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதாக தீர்மானம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

வேலூர்: ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டினால்தான், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்போம் என, புலிமேடு கிராம கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டசபை தொகுதியில், புலிமேடு கிராமம் உள்ளது. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதற்கு அருகே உள்ள, கோவிந்தரெட்டி பாளையத்தில், அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. புலிமேடு பள்ளியில், எட்டாம் வகுப்பு முடித்து விட்டு ஒன்பது, 10ம் வகுப்பு படிக்க, கோவிந்தரெட்டி பாளையத்துக்கு மாணவர்கள் சென்று வந்தனர். புலிமேடு - கோவிந்தரெட்டி பாளையம் செல்லும் வழியில் நாகநதி ஆறு செல்கிறது. ஆற்றில் பாலம் இல்லை. மழை காலங்களில் ஆற்றில் நீந்திக்கொண்டு தான் புலிமேடு மாணவர்கள் கோவிந்தரெட்டி பாளையத்துக்கு செல்ல வேண்டும். பலமுறை ஆற்றில் மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால், புலிமேடு - கோவிந்தரெட்டி பாளையம் குறுக்கே, நாகநதியில் பாலம் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று, புலிமேடில் ஊர் பஞ்சாயத்து நடந்தது. ஊர் நாட்டாண்மை பரஞ்சோதி தலைமை வகித்தார். அதில், புலிமேடு மக்கள் ஆற்றை கடந்து செல்ல, பாலம் கட்டினால்தான், தங்கள் குழந்தைகளை கோவிந்தரெட்டி பாளையம் பள்ளியில் சேர்ப்போம் என்றும், இது குறித்து, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்புவது என்றும், தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X