பொது செய்தி

தமிழ்நாடு

10 கிளை சிறைகளில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி

Added : செப் 13, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர், மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள, 10 கிளை சிறைகளில், கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


வேலூர், மத்திய சிறை கட்டுப்பாட்டில், வேலூர் மாவட்டத்தில், வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜாபேட்டை, அரக்கோணம், திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர், வந்தவாசி, செங்கம் என, 10 கிளை சிறைகள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால், அங்குள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க, கடந்த ஐந்து மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கைதிகள் - உறவினர்கள் சந்திப்புக்கு, வேலூர் சிறைத்துறை, டி.ஐ.ஜி., ஜெயபாரதி, நேற்று முன்தினம் அனுமதியளித்தார். இதையடுத்து இதுவரை, 200க்கும் மேற்பட்ட கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்தித்து பேசியதாக, சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X