சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு எழுத இருந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Added : செப் 13, 2020
Share
Advertisement

தர்மபுரி: நீட்' தேர்வு எழுத இருந்த தர்மபுரி மாணவர், நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, தர்மபுரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி, இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவில் வசிப்பவர், மணிவண்ணன். சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியை சேர்ந்த இவர், தர்மபுரியில் உள்ள டிராக்டர் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களது ஒரே மகன் ஆதித்யா, 20. இவர், 10ம் வகுப்பில், 420 மதிப்பெண் பெற்றுள்ளார். தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், காவேட்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த, 2018ல் பிளஸ் 2 படித்து, 595 மதிப்பெண் பெற்றுள்ளார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற, அவரது பெற்றோர் முதலில் சென்னையிலும், தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தனியார், 'நீட்' தேர்வு மையங்களில் படிக்க வைத்துள்ளனர். கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன், பெங்களூருவிலிருந்து திரும்பிய ஆதித்யா, வீட்டில் ஆன்லைன் மூலம், 'நீட்' தேர்வு பயிற்சி பெற்று வந்தார். இன்று, சேலம், குகைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மையத்தில், 'நீட்' தேர்வு எழுத இருந்தார். நேற்று காலை அவரது பெற்றோர், பூசாரிப்பட்டியில் உள்ள தங்களது விவசாய நிலத்துக்கு சென்றிருந்தனர். மாலை, 6:30 மணிக்கு, பெற்றோர், வீடு திரும்பியபோது, ஆதித்யா தூக்கில் தொங்கி, இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தர்மபுரி மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார், ஆர்.டி.ஓ., தணிகாசலம், மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, 'நீட்' தேர்வு பீதியால், ஆதித்யா தற்கொலை செய்து கொண்டாரா என, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X