சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடு திருடும் முயற்சியில் முதியவர் கொலை

Added : செப் 13, 2020
Share
Advertisement

பவானி: பவானி அருகே, ஆடு திருடும் முயற்சியில், கை, கால்கள், வாயை கட்டிப்போட்டதில், முதியவர் பலியானார்.


ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த, எலவமலை அருகே பெருமாபாளையம், மேட்டுக்காட்டை சேர்ந்தவர் முனுசாமி, 75. இவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்தார். அதே பகுதியில் பாங்காடு மலைகரட்டில், ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல், மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மதியம், 1:30 மணியளவில் ஒரு டூவீலரில், மூன்று பேர் ஒரு ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு செல்வதை, அப்பகுதி மக்கள் பார்த்தனர். சந்தேகமடைந்து கரட்டு பகுதிக்கு சென்று பார்த்தபோது, கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில், முனுசாமி இறந்து கிடந்தார். ஆடு திருட வந்த ஆசாமிகள், முனுசாமி சத்தம் போடாமல் இருப்பதற்காக, அவ்வாறு செய்துள்ளனர். ஆனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பலியாகி விட்டார். சித்தோடு போலீசார், விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆடுகள் மேய்த்து உயிர் வாழ்ந்த முதியவர், திருடர்களின் விபரீத செயலால், உயிரை இழக்க நேரிட்டது, அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X