சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்ணில் புதைந்த நிலையில் பெண் சடலம்: போலீசார் விசாரணை

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஓசூர்: பாகலூர் அருகே, மண்ணில் புதைந்த நிலையில் பெண் சடலம் நேற்று மீட்கப்பட்டது. அவர், கொலை செய்யப்பட்டு, சடலம் புதைக்கப்பட்டதா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரில் இருந்து சர்ஜாபுரம் செல்லும் சாலையில் உள்ள, பிஸ்மில்லா ஒர்க் ஷாப் அருகே, பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மண்ணில் புதைந்து கிடந்துள்ளது. அந்த சடலத்தின் கைகளை நாய்கள் கூட்டம் கடித்து இழுத்து வந்துள்ளன. இதுகுறித்து, நேற்று காலை பாகலூர் வி.ஏ.ஓ., லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அவரது புகாரின்படி, சம்பவ இடம் சென்ற பாகலூர் போலீசார், மண்ணில் புதைந்த நிலையில் கிடந்த, 35 முதல், 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை மீட்டனர். சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், உடலில் காயங்கள் உள்ளதா என்பதை போலீசாரால் அறிய முடியவில்லை. அதனால், பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாரா என்பதை, போலீசார் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இயற்கையாக இறந்திருந்தால், சாலையோரம் சடத்தை அரைகுறையாக புதைத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான், கொலையா என்பது உறுதியாகும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X