பொது செய்தி

தமிழ்நாடு

தலைவாசல் அருகே சிறுத்தை நடமாட்டம்?

Added : செப் 13, 2020
Share
Advertisement

கெங்கவல்லி: வீரகனூரில், ஏரி, விவசாய நிலங்களில், மர்ம விலங்கு காலடி தடம் பதிவாகியுள்ளது குறித்து, வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.


சேலம் மாவட்டம், தலைவாசல், வீரகனூரில் உள்ள விவசாய நிலம், ஏரி உள்ளிட்ட இடங்களில், மர்ம விலங்கின் காலடி தடம் பதிவாகி இருந்தது. ஏரிக்கரையை சேர்ந்த, பழனி, 50, தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு, பூனை, கோழிகளை இழுத்துச் சென்றது.அதே பகுதியில் பதிவான காலடி தடத்தை பார்த்து, சிறுத்தை அல்லது செந்நாயாக இருக்கலாம் என, மக்கள் அச்சமடைந்தனர். இதனால், தம்மம்பட்டி வனச்சரகர் அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர், ஆய்வு செய்தனர். கடந்த மாதம், சேலம், பெரம்பலூர் மாவட்ட எல்லையான கவர்பனையில், மர்ம விலங்கு ஆடுகளை கொன்றது. விவசாய நிலத்தில் காலடி தடமும் பதிவாகியிருந்தது. பெரம்பலூரை சேர்ந்த சிலர், வேட்டை நாய்களுடன் வந்தது தெரிந்ததால், இரு மாவட்ட வனத்துறை, வருவாய்த்துறையினர், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது, வீரகனூரில் உள்ள காலடி தடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் கூறுகையில், ''சிறுத்தை நடமாட்டம் இல்லை. அப்பகுதியில், கேமரா பொருத்தி கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X