சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் பலாத்காரம்: சிறை காவலர் 'சஸ்பெண்ட்'

Added : செப் 13, 2020
Share
Advertisement

வேலூர்: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், வேலூர் சிறைக்காவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


வேலூர், அல்லாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார், 25. இவர், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வருகிறார். சென்னையை சேர்ந்த, பத்மா, 20, என்ற பெண்ணுடன் 'பேஸ்புக்'கில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதனால், கர்ப்பமான பத்மா, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது, கணேஷ்குமார் மறுத்துள்ளார்.இது குறித்து கடந்த ஆக., 28ல், வேலூர் மகளிர் போலீசில், கணேஷ்குமார் மீது பத்மா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளைச்சிறைக்கு கணேஷ்குமார் மாற்றப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 'வாட்ஸ் ஆப்' தகவல் வைரலானதால், அவர் தலைமறைவானார். இதையடுத்து, வேலூர் சிறைத்துறை, டி.ஐ.ஜி., ஜெயபாரதி நேற்று முன்தினம் இரவு கணேஷ் குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். அவரை வேலூர் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X