சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி நடத்தையில் சந்தேகம்: கொல்ல முயன்ற கணவன் கைது

Added : செப் 13, 2020
Share
Advertisement

செய்யாறு: செய்யாறு அருகே, நடத்தை சந்தேகத்தால், மனைவியை பீர் பாட்டிலாலும், கருங்கல்லாலும் தாக்கி, கொலை செய்ய முயன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த விண்ணவாடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35; இவரது மனைவி ஜெயந்தி, 29; இருவரும், செய்யாறு சிப்காட் 'ஷூ' தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் யுகேஷ், 5, கேசிகா, 3; ராமச்சந்திரனுக்கு ஜெயந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை, கிராமத்தின் அருகே உள்ள ஜடேரி காட்டிற்கு மனைவியை அழைத்து சென்ற ராமச்சந்திரன், விஷம் கலந்த உணவு பொட்டலத்தை சாப்பிட கொடுத்தார். இதை, சாப்பிட அவர் மறுத்ததால், பீர் பாட்டில் மற்றும் கருங்கல்லால், ஜெயந்தியின் தலை மற்றும் முகத்தில் தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் ஜெயந்தி மயங்கி விழுந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், ஜெயந்தியை மீட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று ராமச்சந்திரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X