பொது செய்தி

தமிழ்நாடு

பாஸ்போர்ட் சேவை அஞ்சலகத்தில் துவக்கம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச், 25 முதல் நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், தபால் நிலையங்களில் செயல்பட்டு வந்த, பாஸ்போர்ட் சேவை மையம் மூடப்பட்டது. வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு, பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த, 9 முதல் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால், ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, நாளை முதல், திருச்சி மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில், பாஸ்போர்ட் சேவை மையம் துவங்குகிறது. அதன்படி, கரூர், பெரம்பலூர், காரைக்கால் திருத்துறைப்பூண்டி, சீர்காழி ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட உள்ளன. இத்தகவலை, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X