பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணை தண்ணீர் கரூருக்கு வரத்து

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் நகருக்கு வந்தது.


திருப்பூர் மவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் நீர்மட்டம், நடப்பு மாத துவக்கத்தில், 88 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த, 5 முதல் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று, கரூர் நகருக்கு வந்தது.

அமராவதி அணை நிலவரம்: நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 751 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில், 500 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீ ரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 88.32 அடியாக இருந்தது.

மாயனூர் கதவணை நிலவரம்: கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 8,758 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 7,438 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணை நிலவரம்: க.பரமத்தி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்றைய நிலவரப்படி நீர் வரத்து இல்லை. ஆனால், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.99 அடியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X