பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: 'வெங்கமேட்டில் காய்கறி கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும்' என, சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர்-சேலம் பழைய சாலை வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில், காய்கறி கடைகள் அமைக்க கூடாது என, நகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கு, மாற்றாக வெங்கமேடு வி.வி.ஜி., நகரில் கடைகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில்தான் கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என, சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை, எம்.ஜி.ஆர்., சிலை முன், வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு, போராட்டம் கைவிடப்பட்டு, நகராட்சி அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த வியாபாரிகள் தரப்பில் சிலர் புறப்பட்டு சென்றனர். நகராட்சி அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், எம்.ஜி.ஆர்., சிலை பகுதியை தவிர வேறு இடத்தை, வியாபாரிகள் முடிவு செய்து கொண்டு தெரிவிக்க வேண்டும் என, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. வியாபாரிகளுடன் கலந்து பேசி, தெரிவிப்பதாக கூறிவிட்டு, நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். இதனால், நகராட்சி அலுவலகத்தில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X