பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அபராதம் விதிக்க அலுவலர் நியமனம்: கலெக்டர்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.


கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வருவது, சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருப்பது, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறும் வகையில் செயல்படும் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும். அதனடிப்படையில், பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய், தொற்று பரவும் வகையில் பொது இடங்களில எச்சில் துப்பும் நபர்களுக்கு, 500 ரூபாய், சமூக விலகலை கடைப்பிடிக்காத நபர்களிடம், 500 ரூபாய், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் சுகாதாரத்துறையின் அறிவுரையினை மீறி வெளியில் வந்தாலோ, 500 ரூபாய் அபராதம். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் போன்றவைகளுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தொகைகளை வசூலிக்க, சுகாதாரத்துறையின் சார்பில் சுகாதார ஆய்வாளர் நிலையிலான அலுவலர்களும், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் நிலையிலான அலுவலர்களும், போலீஸ் எஸ்.ஐ., உட்பட பல்வேறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார். எஸ்.பி., பகவலன். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சப்- கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X