பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் டிஜிட்டல் தகவல் பலகை சேதம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: ரயில் சேவை துவங்கப்பட்டுள்ள நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சேதமடைந்துள்ள, டிஜிட்டல் தகவல் பலகையை சரி செய்ய வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரும், 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த, 7 முதல், 16 சிறப்பு ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் கரூர் வழியாக காலை, 9:30 மணிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை முதல் மயிலாடுதுறை வரை இயக்கப்படுகிறது. இந்நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பயணிகள் வசதிக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன் வைக்கப்பட்ட டிஜிட்டல் தகவல் பலகை சேதம் அடைந்துள்ளது. கடந்த, ஐந்து மாதங்களாக ரயில்கள் இயக்கப்படாததால், டிஜிட்டல் போர்டும் அணைக்கப்பட்டது. இதனால், டிஜிட்டல் போர்டும் பல இடங்களில் உடைந்துள்ளது. தற்போது, கரூர் வழியாக ஒரு ரயில் மட்டும், இயக்கப்படும் நிலையில், விரைவில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது, ரயில்கள் வரும் நேரம், செல்லும் நேரம், ரயில் பெட்டிகளின் நிலை குறித்து, பயணிகள் தெரிந்து கொள்ள, டிஜிட்டல் பலகை தகவல்கள் உதவியாக இருக்கும். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உடைந்த நிலையில் உள்ள, டிஜிட்டல் தகவல் பலகையை, உடனடியாக சரி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X