பொது செய்தி

தமிழ்நாடு

தோகைமலையில் ஆய்வு: அபராதம் விதிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

குளித்தலை: தோகைமலையில், சுகாதாரத்துறை சார்பாக வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குளித்தலை அடுத்த, தோகைமலையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கலெக்டர் உத்தரவுப்படி, சுகாதாரத்துறை சார்பில், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டார மருத்துவ அதிகாரி தியாகராஜன் தலைமை வகித்தார். பஸ் ஸ்டாண்ட், கடை வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகை மற்றும் பெட்டி கடைகளில் சோதனை நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்றாத, முக கவசம் அணியாமல் செயல்பட்ட, கிருமி நாசினி வைத்திருக்காத, ஒன்பது கடைகளுக்கு தலா, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும்; முக கவசம் அணியாத மக்கள், கடை உரிமையாளர், பணியாளர்கள், வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என, அலுவலர்கள் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X