பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: மாவட்டத்தில் மேலும், 43 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதேபோல, 78 பேர் தொற்று குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம், 2,127 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,705 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 31 பேர் தொற்றால் இறந்து உள்ளனர். தற்போது, 391 பேர் மட்டுமே தொற்று பாதிக்கப்பட்டு, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X