பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 'நீட்' தேர்வு: 2,103 பேர் பங்கேற்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், 'நீட்' தேர்வை, 2,103 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, மே, 3ல் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பிரச்னை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தேர்வு நடக்கிறது. அதில், கரூர் மாவட்டத்தில், வெண்ணைமலை கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில், 363, காருடையாம்பாளையம் வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரியில், 780, காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், 960 என, 2,103 பேர் தேர்வு எழுதுகின்றனர். குறிப்பாக, மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள், 88 பேர்; தனியார் பள்ளி மாணவர்கள் 452 என, மொத்தம், 540 பேர் எழுதுகின்றனர். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மின்னணு பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூடாது. விண்ணப்பத்தில் பதிவேற்றியதை போன்ற புகைப்படத்தை, ஹால் டிக்கெட்டில் ஒட்டுவதற்கு கொண்டு வர வேண்டும் என, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X