பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய குழந்தைகள் விருது: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement
கரூர்: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்பு கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில், வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளின் அங்கீகரிக்கும் விதமாக, 'பால சக்தி புரஸ்கார்' எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது

கரூர்: மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்பு கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில், வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளின் அங்கீகரிக்கும் விதமாக, 'பால சக்தி புரஸ்கார்' எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் அளிக்கப்படும். குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக பால கல்யாண் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. அதில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இது குறித்து விபரங்களை, https://wcd.nic.in// என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வரும், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X