தமிழ்நாடு

வெற்றிலையில் மதிப்பு கூட்டு பொருட்கள்: அரசு கை கொடுக்க விவசாயிகள் கோரிக்கை

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: 'மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலையில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, அரசு உதவி செய்ய வேண்டும்' என,விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் நொய்யல், வேலாயுதம்பாளையம், தளவாப்பாளையம் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில்,, 5,300 ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்கின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வெற்றிலை அனுப்பப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் விளையும், கற்பூர வெற்றிலை, வெள்ளைக்கொடி வெற்றிலைகள் நீண்ட நாட்கள், அழுகாமல் தாங்கும் சக்தி கொண்டவை. ஆண்டிற்கு, எட்டு மாதங்கள் தவிர மற்ற நாட்களில் வெற்றிலை வியாபாரம் குறைவாக இருக்கும். எனவே, வெற்றிலையில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, அரசு முன் வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாத நாட்களில் வெற்றிலை அதிக விலைக்கு விற்பனையாகாது. சில மாதங்களில், விவசாய பணி செலவுக்கு கூட கட்டுப்படியாகாதபடி, விலை கிடைக்கிறது.வெற்றிலை சாகுபடியை நம்பி, 25 ஆயிரம் விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, வாழையில் இருந்து ஊறுகாய், சாக்லேட் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுவதைப் போல, கால்சியம் சத்து நிறைந்த மருத்துவ குணம் கொண்ட, வெற்றிலையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X