தாலுகா அலுவலக வளாகத்தில் விஷ ஜந்துகளால் அச்சம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் தாலுகா அலுவலக வளாகத்தில், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களில், விஷ ஜந்துகள் குடியேறி வருவதால், மக்கள் அச்சப்படுகின்றனர்.


அரவக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பயணியர் விடுதி, இ- சேவை மையம், அரசு கருவூலம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன், போலீஸ் ஸ்டேஷன் இங்கு இயங்கி வந்தது. தற்போது பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாலுகா அலுவலக பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்ட போது, வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை தாலுகா அலுவலக வளாக பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். அவை சிதிலமடைந்து, துருப்பிடித்து உபயோகமற்ற குப்பை கிடங்காக காட்சி தருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக கேட்பாரற்ற நிலையில் உள்ள பழுதடைந்த வாகனங்களில், விஷ ஜந்துகள் குடியேறி அதன் வசிப்பிடமாக மாறி வருகிறது. அவை, அடிக்கடி அப்பகுதிகளில் உலா வருவதால், அங்கு அலுவல் நிமித்தமாக வந்து செல்லும் மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, தாலுகா வளாகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை புதிய போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்கு இடமாறுதல் செய்ய வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X