அசுர வேக வாகனங்களால் சாலையில் நடமாட அச்சம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்: அதி வேகமாக பைக்கில் செல்லும் இளைஞர்களால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சியில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பைக்குகளில் அதிவேகமாக செல்கின்றனர். இளைஞர்கள் பலர் அதிக, 'சிசி' திறன் கொண்ட இன்ஜின் உள்ள பைக்குகளில் நகரத்திலும் கிராம சாலைகளிலும் அதிவேகமாக பைக்கை ஓட்டி வருகின்றனர். பல நேரங்களில் மொபைலில் பேசிக்கொண்டே செல்வதால், அப்பாவி மக்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். குக்கிராமசாலைகளில், பலர் டூ வீலர்களில் ஒரே நேரத்தில் சாலையை அடைத்துக் கொண்டு செல்கின்றனர். ஒரு பைக்கில், நான்கு பேர் பயணம் செய்வது மட்டுமின்றி, ஒரே நேரத்தில், நான்குக்கும் மேற்பட்ட பைக்குகளில் பயங்கர சத்தத்துடன் தெருக்களில் வேகமாக செல்கின்றனர். இதனால், சாலைகளில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன், வாகனச்சோதனை மேற்கொண்டு அதிவேகமாக செல்லும் பைக்குகளை, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X