பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடிய வாரச்சந்தை

Added : செப் 13, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குமாரபாளையம் வாரச்சந்தை பல மாதங்களாக நடக்காமல் இருந்தது. கடந்த வெள்ளி முதல், மீண்டும் செயல்பட துவங்கியது. சென்ற வாரம் போல் இந்த வாரமும் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. சமூக இடைவெளியை பின்பற்ற பிரசாரங்கள் செய்து வருவதாலும், குமாரபாளையம் பகுதியில் கொரோனா பாதிப்பு பரவி வருவதாலும், சந்தை போன்ற இடங்களுக்கு வர, பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.


வியாபாரிகள் கூறியதாவது: வழக்கமாக அமைக்கப்படும் கடைகளை விட குறைவான அளவில்தான் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சத்தால் மக்கள் இங்கு வர ஆர்வம் காட்டாமல் உள்ளனர். சாலையோர காய்கறி, மளிகை கடைகள் அதிகம் வந்ததால், ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் அங்கேயே பொருட்களை வாங்கி விடுகின்றனர். சந்தை வியாபாரிகள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X