பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: வெண்ணந்தூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெங்காயம், தக்காளி, மிளகாய் போன்ற தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ?ஹக்?டருக்கு, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ?ஹக்?டருக்கு, 2,500 மற்றும் தக்காளி, கத்தரி, வெண்டை பயிர்களுக்கு, 3,750 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, ரேஷன்கார்டு நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன் பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X