பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் வந்த 2,600 டன் மக்காச்சோளம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான மக்காச்சோளம், கோதுமை, புண்ணாக்கு, சோயா போன்ற தீவன மூலப்பொருட்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, பீஹார், குஜராத் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். அரிசி, கோதுமை, நாட்டு சர்க்கரை உள்ளிட்டவையும், சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம், சம்பந்தப்பட்ட அரவை ஆலை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, கர்நாடகா மாநிலம், உடுப்பியில் இருந்து, சரக்கு ரயில் மூலம், 42 வேகன்களில், 2,600 டன் மக்காச்சோளம், நாமக்கல் வந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம், அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X