பொது செய்தி

தமிழ்நாடு

ஈமு நிறுவனங்களில் பறிமுதல் செய்த வீட்டுமனை: வரும் 15ல் பொது ஏலம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில், 'செல்லம் ஈமு பார்ம்ஸ்' மற்றும் 'வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மென்ட்ஸ்' என்ற ஈமு நிறுவனத்தின் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில், விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின், அசையா சொத்துகளான, ப.வேலூர் அடுத்த பிள்ளக்களத்தூர் கிராமத்தில் உள்ள, 2,360 சதுரடிகள் கொண்ட இரண்டு வீட்டுமனைகள் (தலா மதிப்பு, 11 லட்சம் ரூபாய்) மற்றும், ராசிபுரம் அடுத்த காட்டூர், காட்டுக்கொட்டாய் கிராமத்தில் உள்ள, 4,137, 2,012, 3,716 கால் சதுரடி (மதிப்பு, 25 லட்சம் ரூபாய்) கொண்ட ஒரு வீட்டு மனை அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வரும், 15 காலை, 11:00 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தகுதிபெற்ற அலுவலர் மற்றும் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலரால் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஏல நிபந்தனைகளுக்குட்பட்டு, ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும், வரும், 15 காலை, 10:00 மணிக்கு, திரும்ப தரக்கூடிய பிணை வைப்புத் தொகையாக, ஒவ்வொரு வீட்டுமனைக்கும், அவற்றுக்கான அடிப்படை ஏலத்தொகையில், 10 சதவீதம் மாவட்ட வருவாய் அலுவலரிடம், ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், 'CHELLAM EMU FARMS CRIME NO 133/2013/DRO/NAMAKKAL' payable at Namakkal என்ற பெயரில் வரைவோலையாக செலுத்தி, பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X