பொது செய்தி

தமிழ்நாடு

மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை: சாயப்பட்டறை உரிமையாளர்கள் கலக்கம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளால், சாயப்பட்டறை உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.


குமாரபாளையத்தில், 47, பள்ளிபாளையத்தில், 80 அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் உள்ளன. அனுமதி பெறாதவை ஏராளமானவை உள்ளன. இதில் ஒரு சில தவிர, பெரும்பாலான சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால், ஆற்றில் கலந்து தண்ணீர் மாசடைகிறது. இதனை பயன்படுத்தும் பொதுமக்களும் அலர்ஜி முதல் புற்றுநோய் வரை பாதிக்கப்படுகின்றனர். கால்நடைகளும், மீன்களும் பாதிக்கப்படுகின்றன. கடந்த, 5ல், குமாரபாளையம் மாவட்ட தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார், சாய ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், பொதுசுத்திகரிப்பு நிலையத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். சாயக்கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார். தொடர்ந்து, 7 முதல், அனைத்து சாயஆலைகளில் ஆய்வு செய்து, சாய கழிவுநீரின் மாதிரியை சேகரித்தனர். இந்த பணி முடிந்தவுடன் நேற்று முன்தினம் முதல், விதிமுறை மீறி செயல்பட்ட சாய ஆலைகளுக்கு, 'சீல்' வைக்கும் பணி, தாசில்தார் தங்கம் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு பின்பும் சாய ஆலைகள் செயல்பட்டால் மின் இணைப்பு துண்டிப்பு, சட்ட ரீதியான நடவடிக்கை என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுப்பதால் சாய ஆலை உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X