பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் 95 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 3,210ஆக உயர்வு

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு போலீசார் உள்பட நேற்று, ஒரே நாளில், 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், திருச்செங்கோடு டி.எஸ்.பி., அலுலகத்தில் பணியாற்றும், 47 வயது ஆண் போலீஸ், நாமக்கல் கமர்ஷியல் டாக்ஸ் அலுவலகத்தில் பணியாற்றும், 33 வயது ஆண் உதவியாளர், அரசு பள்ளியில் பணியாற்றும், தோளூரை சேர்ந்த, 49 வயது ஆசிரியர். சீராம்பாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளியின், 50 வயது தலைமையாசிரியை, திருச்செங்கோட்டில் பணியாற்றும், 50 வயது போக்குவரத்து பெண் காவலர், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும், 31 வயது நர்ஸ் ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, ப.வேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால், பாதிக்கப்பட்டனர். அதேபோல், ஈரோடு, திருச்சி, சேலம், கரூர், கோவை மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,210 ஆக உயர்ந்தது. மேலும், நேற்று இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதன் மூலம், மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X