பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கமலாலய குளம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: பத்து ஆண்டுகளுக்கு பின், முழு கொள்ளளவை எட்டி, கடல் போல் காட்சியளிக்கும், நாமக்கல் கமலாலய குளத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில், கனமாகவும், ஒரு சில இடங்களில் லேசாகவும் பெய்து வருகிறது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில், மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி, சாலை, குளம், குட்டை, ஏரியில் கலந்து, அதன் நீர்மட்டத்தை உயர்த்தி வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக, நாமக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கமலாலய குளம் நிரம்பி வருகிறது. நாமக்கல் நகரில் மட்டும், கடந்த, 1ல், 29 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், 2ல், 16, 3 மற்றும் 4ல், தலா, 2, 5ல், 29, 5ல், 15, 7 ல், 4, 10ல், 92 என, எட்டு நாட்களில், மொத்தம், 189 மி.மீ., மழை பெய்துள்ளது. அதன் காரணமாக, நகரில் மையத்தில் உள்ள கமலாலய குளம், 10 ஆண்டுகளுக்கு பின், அதன் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது, பார்ப்பதற்கு, கடல் போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. நகர மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X