மயானத்தில் முட்புதர்; சடங்கில் சிக்கல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமகிரிப்பேட்டை: திம்மநாயக்கன்பட்டி மயானத்தில் வளர்ந்துள்ள புதரை சுத்தம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம், திம்மநாயக்கன்பட்டி ஊராட்சி மாவட்ட எல்லையில் அமைந்தள்ளது. இங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆத்தூர் பிரதான சாலையோரம் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மயானத்திற்கு செல்லும் வழியிலும், மயானத்திலும் முட்புதர்கள் அதிகம் வளர்ந்துள்ளன. வாகனங்களில் எடுத்து வரும் சடலத்தை, உள்ளே கொண்டு செல்ல கூட முடியாதபடி செடிகள் வளர்ந்துள்ளன. அங்கு, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் இருக்கும் என பொதுமக்கள் பயப்படுகின்றனர். அதேபோல், இறுதிச்சடங்கு செய்வதற்கும் போதுமான வசதி இல்லை. மயானத்தை சுத்தம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X