சிதிலமடைந்த சாலை: சீரமைக்க கோரிக்கை

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் கொண்டம்பட்டிமேடு உள்ளது. அங்கிருந்து, சிவியம்பாளையம், அண்ணாநகர் வழியாக துறையூர் சாலை, இணைப்பு சாலையாக அமைந்துள்ளது. அப்பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். அவர்கள் முக்கிய பணியின் காரணமாக நாமக்கல் வருவதற்கும் சேந்தமங்கலம் செல்வதற்கும் இந்த பாதையை பயன்படுத்துவர். அந்த சாலை தற்போது சிதிலமடைந்துள்ளது. குறிப்பாக, சிவியம்பாளையத்தில் இருந்து கொண்டம்பட்டிமேடு சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதனால், அவசரகதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். தற்போது, மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள குழிகள் தெரியாத அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், பொதுமக்கள் படுகாயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து விபத்து நடக்கிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X