பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை விலை 490 காசாக நிர்ணயம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 470 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசு உயர்த்தப்பட்டு, 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. உற்பத்தி குறைந்ததுடன், நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை, மூன்று நாட்களில், 70 காசு உயர்ந்துள்ளது. நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 510, ஐதராபாத், 501, விஜயவாடா, 498, பர்வாலா, 475, மும்பை, 550, மைசூரு, 518, பெங்களூரு, 515, கோல்கட்டா, 550, டில்லி, 482. கிலோ, 113 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையிலும், 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X