பொது செய்தி

தமிழ்நாடு

ஆகாய கங்கையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் இல்லாமல் 'வெறிச்'

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: தொடர் மழை காரணமாக, கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. கொரோனா தடை காரணமாக, சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமாக கொல்லிமலை அமைந்துள்ளது. இங்கு, 300 அடி உயரத்தில் இருந்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. மூலிகை கலந்து கொட்டுவதால், அதில் குளித்தால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. அதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுப்பர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கொல்லிமலையிலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால், அவற்றை ரசிக்கவும், ஆனந்த குளியல் போடவும் சுற்றுலா பயணிகள் செல்லாததால், வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X