பொது செய்தி

தமிழ்நாடு

'நாமக்கல் மாவட்டத்தில் 1,933 போலி பயனாளிகள்'

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'பி.எம்., கிசான் திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், 1,933 பேர் போலியாக நிதி பெற்றுள்ளனர். அதில், 37 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், தற்போது, கொரோனா வேகமாக பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த, அரசின் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தில், முறைகேடு குறித்து, இந்திய அளவில், தமிழக அரசு தான் முதலில் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 1,933 பேர் போலியாக, இந்த நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம், 71 லட்சம் ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. இதுவரை, 37 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. விரைவில், மீதமுள்ள பணம் வசூலிக்கப்படும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழையை சமாளிக்க, மின்சார வாரியம் மூலம், பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏதாவது இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அவற்றை சமாளிக்க, மின்சார வாரியம் தயார்நிலையில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X