அனைத்து கட்சி கூட்டம் கிடையாது: மத்திய அரசு முடிவு

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பார்லிமென்ட், அனைத்துகட்சி, கூட்டம், மத்தியஅரசு,

புதுடில்லி: பார்லிமென்ட் தொடர், முன்பு ஆண்டுதோறும் நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டம் இந்த ஆண்டு , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படாது என அறிவிக்கப்படாது.

நாளை துவங்கும் பார்லி தொடர், அக்., 1 வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் குறித்து விவாதிக்க , இன்று ராஜ்யசபா அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. ஆனால், கேள்வி நேரம் ரத்து என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தற்போதைய தொடரில், சீன அத்துமீறல், கொரோனா பிரச்னை, பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. வழக்கமாக, பார்லிமென்ட் தொடர் துவங்குவதற்கு முன்பு, மத்திய அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பிரச்னை காரணமாக அந்த கூட்டம் ஏற்பாடு செய்யவில்லை.


latest tamil newsநாளை துவங்கும் பார்லிமென்ட் தொடர், முதல்நாளில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. மற்றநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை அவை நடைபெற உள்ளது. தொடர் நடைபெற உள்ளதால், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. எம்.பி.,க்கள் வருகைப்பதிவு மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் எம்.பி.,க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம். 72 மணி நேரத்திற்கு முன்பு பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும் என துணை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
13-செப்-202021:13:28 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லது. உருபடியான எதையும் செய்ய விடாமல் எதிப்பதே குறிக்கோளாக நினைத்து கொக்கரிப்பது அடங்கியது. இதேபோல் கூட்டணி வைத்து ஓட்டு கேட்பது ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை ஒழித்து தீர்மானம் போட்டு சட்டமாக நிறைவேற்றுங்கள் ஊழலுக்கும் கொள்ளை அடிப்பதற்கும் வழியில்லாமல் போகும் மக்கள் மத்தியில் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்எளவு ஓட்டு என்பதை பார்க்கலாம். பெரிய ஊழல்கட்சி ஊழலால் சேர்த்து வைத்துள்ள பணத்தை சிறு கட்சிகள்மூலம் கோடான கோடி கொடுத்து மக்களை மயக்கி பித்தலாட்ட பேச்சுகளை பேசி ஜெயிக்கும் செயலும் ஒழியும் மைய அரசு கவனம் கொள்ளனும்.சட்டம் இயற்றிடனும்.ரவுடிகள் ஆட்சிக்கு வராமல் அகற்றிடனும்.
Rate this:
Cancel
13-செப்-202015:19:51 IST Report Abuse
ஆரூர் ரங் திமுக😎😎😎 ஆட்களின் சமோசா, பஜ்ஜி, போண்டா ஆசை நிராசையானது
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
13-செப்-202017:02:20 IST Report Abuse
அம்பி ஐயர்அவுனுங்க காசு கொடுத்து திங்கிறதுக்கே மூக்கால அழுவானுங்க.... இப்போ மட்டும் என்ன பார்லிமெண்ட் கேண்டீன்ல தான் மலிவு விலையில கிடைக்குமே..... நல்லா மொக்குவானுங்க........
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
13-செப்-202017:03:38 IST Report Abuse
அம்பி ஐயர்பார்லிமெண்டிற்கு.... திமுக எம்பிக்கள் முக்கியமா கனிமொழி ராசா...... ரெண்டு பேரும் ஹிந்தி தெரியாது போடா...ன்னு டீஷர்ட் போட்டுட்டு போவாங்களா....???...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
13-செப்-202019:08:22 IST Report Abuse
madhavan rajanஹிந்தி தெரியாது போடான்றதையும் ஹிந்தில எழுதிட்டு போனாதான் அங்கிருக்குறவங்களுக்கு புரியும். செய்வீர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X