கேலி சித்திரம்: பிரான்ஸ் பத்திரிகைக்கு அல்கொய்தா மிரட்டல்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

பாரிஸ்: சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகை மீண்டும் பதிப்பித்துள்ளதற்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.



latest tamil news



கடந்த 2015ம் ஆண்டு, முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை பாரீசில் அமைந்துள்ள 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை நிறுவனம் வெளியிட்டது. இதற்கு அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனத்தின் மீது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெபேன் கார்போனியர் உட்பட, 12 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்ட சையது கோச்சி மற்றும் செரீப் கோச்சி என்ற இருவர் பிரான்ஸ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இஸ்லாம் சார்ந்த கேலிச் சித்திரங்களை சார்லி ஹெப்டோ பத்திரிகை சில நாட்களுக்கு முன் மீண்டும் பதிப்பித்தது. இதற்கு தற்போது அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சார்லி ஹெப்டோ தொடர்ந்து எங்களை சீண்டுகிறது. அதனால், கடந்த 2015ம் ஆண்டு அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலோடு அனைத்தும் முடிவுற்றதாக கருத வேண்டாம். மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்' என, தெரிவித்துள்ளது.

இஸ்லாம் மட்டுமின்றி பல்வேறு மதங்கள் சார்ந்த சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களை வெளியிடுவதை சார்லி ஹெப்டோ பத்திரிகை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் அந்த பத்திரிகை பரவலான விமர்சனத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-செப்-202019:37:39 IST Report Abuse
sankaseshan மூர்க்கனுங்களுக்கு எல்லோரையும் மிரட்ட சுதந்திரம் வேணும் அவனுங்களை சொன்னால் கோபம் பொத்து கிட்டு வரும் .
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
13-செப்-202019:37:01 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே இஸ்லாத்தை பற்றி கேலிசித்தரம் வரைந்தவர்கள் பனிரெண்டு பேர் கொல்லப்பட்டனர் - செய்தி. இந்து மதத்தை தாக்கி பேசுபவர்களை, மோசமாக விமரிசிப்பவர்களை, இந்து கடவுளர்களை கேலியாக பேசுபவர்களை, இஸ்லாமியர்கள் திருமணத்தில் இந்து திருமணத்தை பற்றி விமரிசிப்பவர்களை என்ன செய்யலாம் ? அட இப்படி மிரட்டுபவர்கள் ஏதாவது வாய் திறந்து பேசினார்களா என்றால் இல்லை ?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-செப்-202016:09:24 IST Report Abuse
வெகுளி கருத்து சுதந்திர காவலர்கள் கறுப்பர் கூட்டமும் திமுகவின் ஆ.ராசாவும் சார்லி ஹெப்டோவை ஆதரித்து அந்த கேலிச்சித்திரங்களை இங்கு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X